Tuesday 26 April 2011

மௌனமாய் பேசுகிறாள்

மெல்லத்தான் சிரிக்கிறாள் 
மௌனமாய் பேசுகிறாள் 
தென்றலாகி போகிறாள் 
மொத்தமாய் அள்ளிப் போகிறாள்
ஐயோ கொல்கிறாள்
கண்களில் காதல் சொல்கிறாள் 
பார்வையால் பாதி சொல்லிப் போகிறாள் 
சுழிக்கும் உதட்டில் மீதம் கொண்டு போகிறாள்

Friday 22 April 2011

உன்னுள் மோகமிட்டு

உன் மௌன மொழி கூட அழகுதான்
உன் கண்கள் கதைகள் சொல்லும்போது 

வேண்டாம்... வேண்டாம்...
என்று சிணுங்கிக் கொண்டே 
நீ நெருக்கம் கூட்டுவதும் 

கேசம் கோதி
கன்னம் வருடி 
உடல் முழுதும் 
கைகளால் 
காதல் பாடம் சொல்லி 
உன்னுள் மோகமிட்டு 

அரை மயக்க
இமைகளில் முத்தமிட்டு 

வளைந்து குழைந்து 
எனது அணைப்பில் 
உருகிப் போவதும் 

உள்ளும் புறமும்
முன்னும் பின்னும்
மேலும் கீழும்
முதலும் முடிவுமாய்

என் கை பிடித்துக் கொள்

நீ இல்லாத பொழுதுகளை 
கடந்து செல்வது 
அத்தனை கடினமாக இருக்கவில்லை....

நான் இல்லாத தருணங்களில் 
உன்னை தீண்டும் துன்பங்கள் 
உன்னுள் 
ஏற்படுத்தும் நெருடல்கள் 
கண்ணீர் துளிகளை தடுக்கமுடியவில்லை 

என் கை பிடித்துக் கொள் 
நான் நிம்மதியாய் இருப்பேன்

Wednesday 20 April 2011

மொத்தத்தில் முழுவதுமாய்

உன் தீண்டலில் 
என்னை மறக்கிறேன் 
உன் முத்தத்தில் 
என்னை இழக்கிறேன் 
உன் தழுவலில்
காற்றோடு கரைந்து போகிறேன் 

என் விரல் நுனி 
உன் மேனி எங்கும் கோலம் போடும் 
அத்தனை மயிர் கால்களுக்கும்
இன்பச் 
சேதி சொல்லும் 

என்னை உன்னுள் இழுத்து 
உன்னை என்னுள் இழக்கும் 
விநோதமிது 

உன் இடை தழுவி 
உன் கண் பார்கிறேன் 
அந்த மோகம் 
என்னை விழுங்கியது 
அந்த தாகம் 
என்னை கொன்றே போட்டது 

என் கைகள்
உன் வளைவுகளின் 
மறைவுகளில்
சுகங்களின் 
ரகசியங்களை தேடும் 
தேடி
அவைகளை மலரச் செய்யும் 

உன் கோவை இதழ்களின் மென்மையையும்
உன் காது மடல்களின் தன்மையையும் 
நான் வருடி அறியும் வேளையில் 
மோகத்தில் மௌனிக்கும் கண்களும் 
காமத்தில் இறுகும் கைகளும் 
தாகத்தில் துவளும் இடையும்...

இல்லாத உடை விளக்கி 
சொல்லாத அழகு பார்த்து 
கொள்ளாத இன்பம் கொண்டேன் 
அன்பே 
நீதான் 
அழகின் மூலமோ 

உன் இடை இழுத்து
காற்றுக்கும் இடம் விடாமல்  
இறுக்கி அணைக்க 
உன் பெண்மையின் மென்மைகள்
காமக் களியாட்டம் 
அழுந்தச் சொல்ல....

வார்த்தைகள் தொண்டையில்
சிக்கிக் கொள்ள 
மௌன மொழி
நியதியாக 
பிதற்றல்கள் அதிகமாக 
கட்டி அணைத்த கைகள் 
நடுக்கம் கொள்ள 
மொத்தத்தில் 
முத்தத்தில் முழுதாய் 
தொலைத்து - 
இதழ்கள் உறவு கொள்ள
உடல்கள் சங்கமிக்க 
இன்பத்தின்  விளிம்பில் நாம்.....

Sunday 17 April 2011

சந்தோஷத்தின் பிடியில் நீ

அருமையான வார்த்தைகள்
உனக்கும் எனக்கும் மட்டுமே 
புரிந்த வார்த்தைகள் 
காட்சிகள் கண்முன் விரிகிறது 
கருத்தை நிறைக்கிறது 
சந்தோஷத்தின் பிடியில் நீ
வந்த வேலை 
முடிந்த திருப்தியில் நான்....

Thursday 14 April 2011

காத்திருத்தலின் முடிவில்

யாரும் இல்லா 
இருட்டு வனாந்திரம் 
சுற்றிலும்
ஒரு மயான அமைதி 
உனக்காக நான் மட்டும் தனியாய்...

உனக்காக காத்திருக்கும் 
யுகங்களாகும் நிமிடங்களில் 
இந்த தனிமை 
மிரள வைக்கிறது....

இனிமையான 
உன் நினைவுகள்தான் 
கை கோர்த்து 
கதை பேசி 
துணை நிற்கின்றன....

காத்திருத்தலின் முடிவில் 
அதோ நீ வருகின்றாய் 
அழகு பிம்பமாய் 
தூசி தட்டி எழுகின்றேன் 
அந்த காற்று 
உன்னை கடத்திக் 
கொண்டு போனதே...

மீண்டும் 
அதே வெறுமையில் 
காத்திருக்கிறேன்
அதீத காதலோடு
அதீத நம்பிக்கையோடு....

உன் சிரிப்பை மட்டும்

எத்தனை தூரம் போனாலும் 
எத்தனை நேரம் ஆனாலும் 
உன் சிரிப்பை மட்டும் மறந்துவிடாதே 
அதுதான் 
உன்னை எனக்கு அடையாளம் சொல்லும் 
நான் கண்டிப்பாய் வருவேன் 
நீ எங்கிருந்தாலும் வருவேன்....

Wednesday 6 April 2011

நானா இது

எப்படிச் செய்தேன் இதை
குத்திக் கிழித்து 
மூச்சை முட்ட வைத்து 
நானா இது 

உன் ஒரு சொட்டு 
கண்ணீருக்கே 
உயிர் விட்டுவிடுவேன்
உன் இதயத்தில் 
உதிரம் வரவழைத்தேன் 
நானா இது 

உனக்காகவே நான் இருந்தேன்
என்னுள் உன்னை வைத்திருந்தேன் 
எப்படி நான்
உன்னை காயப் படுத்தினேன் 
நானா இது 

என்னை மன்னிப்பாயா
என் காதலே 
இதெல்லாம் நான் செய்ய 
நினைக்கவுமில்லை 
ஆனால் செய்துவிட்டேன் 
எங்கே இடறிப் போனேன் 
புரியவில்லை 
கொஞ்சம் தள்ளி வந்து பார்க்கையில் 
அருவருப்பாய்
ஆனாலும் தெளிவாய் தெரிந்தது 
என்னை மன்னிப்பாயா....

உன் பெண்மையை நேசிக்கிறேன்

தொட்டு விடத்தான் 
துடிக்கும் என் விரல்கள் 
ஒரே ஒரு தீண்டல் 
கட்டவிழ்க்க 
காத்திருக்கும் உன் இதழ்கள் 
அந்த மோகம் தாங்காமல்
ஒடிந்து விடுமோ 
மெல்லிய காம்பு
இந்த அச்சம் 
என்னை தள்ளி இருக்க வைத்தது 
உன்னை நான் 
முழுதாய் காதலிக்கிறேன் 
அதைவிட அதிகமாய்
உன் பெண்மையை நேசிக்கிறேன்

ஒரு தாஜ்மகால்

உன்னை 
முதன் முதல் 
உணர்ந்த அந்த இடம் 
எனக்கு அது எப்போதும்
ஒரு தாஜ்மகால்...

ஒரு கணம் 
உன்னை கடந்து சென்ற
அந்த ஒரு கணம்
உன்னை முழுதாய் உணர்ந்தேன் 

நீ எனக்கு 
புதிதாகவே தெரியவில்லை 
கோடானு கோடி வருடங்கள் 
ஒன்றாய் இருந்த உணர்வு...

முதல் சந்திப்பில்
என் அன்பை சொல்ல 
கட்டி அணைப்பதா 
கை கோர்த்து கொள்வதா 
உச்சி முகர்ந்து 
முன் நெற்றியில் முத்தமிடுவதா...

ஏதும் செய்யாமல் 
அமைதியாய் ரசித்தேன்
உன் 
வெள்ளை சிரிப்பையும்
பட்டாம்பூச்சி கண்களையும்

Tuesday 5 April 2011

ரெட்டை ஜடை வயசு

ரெட்டை ஜடை வயசு 
பட்டாம்பூச்சியாய் சிறகடித்து 
கை கோர்த்து 
உலா வந்த காலங்கள் ...

ஆற்றில் 
ஓடுகிற தண்ணீருக்குள் 
ஒன்றாய்
கூடு கட்டிய 
சந்தோஷங்கள்....

நீ விட்டுச் செல்லும் 
வாசத்தை 
காற்றிடம் கேட்டு வாங்கி 
என்னுள் இருத்திக் கொள்வேன் 
இரவில்
நான் கற்பனை கொள்ள...

கோவில் சுவற்றில்
காதல் ரேகை பதித்தோம்
அந்த
காதல் பட்டாம்பூச்சி
இருவர் உள்ளத்திலும்

Monday 4 April 2011

நான் எம்மாத்திரம்

அவ்வளவு பெரிய கடல்
அந்த நிலவை காணாமல் 
ஆர்பரிக்கின்றாள் 
அங்கும் இங்கும் அலைகின்றாள் 
துடித்து போகின்றாள்....
அம்மாவாசை இரவின்
அலைகளின் ஆர்பரிப்பு 

 சந்தோஷக் கூத்தாட்டம் 
முழு நிலவை பார்த்தவுடன் 
துள்ளிக் குதிக்கின்றாள் 
தடை அறுத்து 
வின் எழ துடிக்கின்றாள் 
அத்துணை ஆரவாரம் 
பவுர்ணமி இரவின் 
அலைகளின் ஆரவாரம் 

நான் எம்மாத்திரம்
உன்னை காணாத 
அம்மாவாசைகளிலும் 
நீ முழுதாய் இருக்கும்
பவுர்ணமிகளிலும்

Saturday 2 April 2011

இங்கேயேதான் இருக்கின்றேன்

சுற்றிலும் வல்லூறுகள் 
இந்த வாழ்க்கை வளையத்துக்குள் நீ மட்டும் 

போர்க்களத்தில் நீ
தனியாய் 
ஒரு மாய வலைக்குள் 

உன்னை எனக்கு தெரியும் 
உன் வீரம் எனக்கு தெரியும் 
உன்னை விட்டு என்னை போகச் சொல்லும்
உன் தன்னம்பிக்கை 
எனக்கு பிடிக்கிறது 
ஆனாலும் என் காதல் 
உன்னை விட்டு செல்ல மறுக்கிறது 

உன் வாள் சுழற்றும் வேகம்
உன் உடல் காக்கும் கவசம்
அனைத்தும் என்னை 
பிரம்மிக்க வைக்கிறது 
இருந்தும் என் கால்கள் 
நகர மறுக்கிறது 

உன் உடலில் 
ஒரு கீறல் விழுந்தாலும் 
நான் மரித்துப் போவேன் 
நினைவில் கொள் 

இங்கேயேதான் இருக்கின்றேன் 
உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்
வேண்டாம் என்று சொல்லும்
தன்னம்பிக்கை உன்னுள் இருந்தாலும்
என் எண்ணம் 
உன் வாள் சுழற்சியின் வேகம் கூட்டும் 
என் பாசம் 
உனக்காக மற்றுமொரு அரண் அமைக்கும் 

ஒரே ஒரு பார்வை போதும் 
உன் தன்மானத்தை தொடாமல் 
உன்னை காத்திடுவேன் 
நீ என் காதலி
நீ ஒரு பெண்
நீ ஒரு மனிதப் பிறவி....

இங்கேயேதான் இருக்கின்றேன் 
காலம் முழுதும் 
இருப்பேன்...
நீ இளைப்பாற 
உன் வெற்றியை கொண்டாட
உன்னை தாங்கிக் கொள்ள...
என் அன்பே