Showing posts with label கீச்சுகள். Show all posts
Showing posts with label கீச்சுகள். Show all posts

Tuesday, 14 February 2012

கண்டதும் கண்டுகொண்டது


அன்றைய இன்றின் நினைவுகளில்
இன்றைய பொழுதை
வாழ்கின்றேன்
அந்த நாளின் நினைவுகள்
வசந்தமான வாசமாய்
வீசுகின்றன சுகமாய்...

இதயத்தை
மெல்லத் தொட்டு
தட்டி தட்டி
காதல் மொட்டுக்களை
ஒவ்வொன்றாய் பூக்கச் செய்கின்றது...

யுகம் யுகமாய்
தொடரும் நேசம் இது
கண்டதும் கண்டுகொண்டது
உனக்காகவே காத்திருந்தது போல்...

உன் சட்டை பொத்தானில்
சிக்கிக் கொண்ட மயிர்போல
உன்னோடு சுற்றுகிறது
என் நினைவுகள்...

மௌனமாய்
ஒரு மூலையில் அமர்ந்து
உன் மௌனத்தை
ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்
புரிய ஆரம்பித்தபின்
இதுவும் அழகாய்த்தான் இருக்கிறது...

நீ விட்டே போனாலும்
இனி நான் வாழ்வேன்
அடுத்து வரும்
அந்த சந்திப்பிற்காக
காத்திருக்க ஆரம்பித்துவிட்டேன்
அடுத்த பிறவியானாலும்...

Tuesday, 31 January 2012

எனது கீச்சுகள் - 3

என் கண்ணாடியில் உன் பிம்பங்கள் மட்டுமே தெரிகிறது..
 
ஆசையால் விட்டுப்போன வெட்கம்கூட கூசும் உன் பார்வையாலே வந்து ஒட்டிக் கொள்கிறது...
 
விரல் நுனிகள் முத்தமிட்டுக் கொள்ளும்போதல்லாம் உதடுகள் ஏனோ துடிக்கின்றன... 
 
நீ கொடுத்த முத்தங்களின் மிச்சங்கள் என்னை இம்சித்துக்கொண்டிருக்கின்றன...

என் இதயம் முழுதும் இறைந்து கிடக்கின்றாய்... எடுத்து கோர்க்கின்றேன் முழுதாய் சூடிக்கொள்ள...

மனம் ஏங்குகிறது உன் நேசம் சொல்லும் பார்வைக்காக...

சண்டை போட தயாராய் காரணங்களுடன் நீயும்... சமாதானம் செய்ய முத்தங்களுடன் நானும்...

சுகமாய் காற்றும் இதமாய் தலையணையும் தூக்கம் கொண்டுவரட்டும்... காலைமுதல் நடந்த கால்கள் இளைப்பாறட்டும்...
 
தூங்கித் திரியும் என் நெஞ்சம் உன்னை கேட்டதும் விழித்துக் கொள்கிறது...
 
போன வருடம் வாங்கிக் கொடுத்த அந்த ஒற்றை ரோஜா இன்னும் உன் கைப்பையில் இருக்கும்... எடுத்துப் பார் என் காதல் சொல்லும் #Feb14