Wednesday 22 February 2017


மலரத் துடிக்கும் மொட்டுக்களாய்

ஒரு இதழ் விரிகிறது
மொட்டுக்கள் அத்தனையும்
மலர்ந்துவிட தவிக்கின்றன
எங்கென்று தேடுகிறேன்
முத்தங்களால் தவிக்கின்றேன்
வெட்கப்பட்டு மறைகின்றன
தொட்டவுடன் காணாமல் கரைந்து போகும் பட்டாம்பூச்சியாய்
தொடும் முன்னே சுருக்கிக் கொள்ளும் தொட்டாஞ் சிணுங்கியாய்
ஆனால் தீண்டலுக்கு தவித்து
மலரத் துடிக்கும் மொட்டுக்களாய்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் மலர்ந்திருக்கிறாய்
மொத்தமாய் மலரும்போது நான் என்னாவேனோ
முகம் மூடும் விரல்களை நீக்கிப் பார்க்கிறேன்
அத்தனையும் காதலாய் காத்திருக்கிறாய்
ஒரு ஆசை முத்தமிட்டுக் கொள்கின்றேன்

Thursday 18 July 2013

நீ என்னை ரசிக்கிறாய்

அடர்ந்த மழைத் துளிகளில்
ஒருவனாய் நான்

ஜன்னலுக்கு அந்தப் பக்கம்
அழகாய் நீ

நீ என்னை ரசிக்கிறாய்
மழையைத்தான்

உன்னை தீண்டிப் பார்க்க 
மூடிய ஜன்னலில்
கரைந்து வழிகிறேன் நான்...

கவிதைகள் வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை

மீண்டும் காதல் கவிதைகள் 
காற்றில் வருகிறது

அந்த துப்பட்டா அலையும் போதெல்லாம்
என்னை அசைய வைக்கிறது

முடியாத கூந்தலில்
சிக்கவைத்து சிரிக்கிறது

சத்தம் போடாத புன்னகையில்
என்னை சிறைபிடிக்கிறது

கவிதைகள் 
வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை

காட்சிகளாய்
உணர்வுகளாய்
நினைவுகளாய்
நீயும் உன் நேசமும்..

Monday 4 February 2013

வரண்டு போயிருக்கும் இதழ்கள்



ஈரம் வற்றிய
என் இதழ்கள்
உன்னை அணைத்து
விழுங்விட பார்க்கின்றன
கருவளையம் சூடிய
உன் கண்கள் என்னை விழுங்கிவிட்டிருந்தன...

மறக்கவியலா நினைவுகளோடு
மீண்டும் உன் இடை வளைக்க
தழுவுகின்றன என் விரல்கள்...

மோகமும் காமமுமாய் உருக்கொண்டு
வாசமும் இதமும் வேண்டுமென
சிணுங்குகிறது என் காதல்...

உன் காதோர சூட்டிற்கும்
கழுத்து நரம்பு துடிப்பிற்கும்
முலைகளின் விம்மலுக்கும்
கனுக்காலின் மதர்ப்பிற்கும்
ஈடுகொடுக்க முடியாமல்
தவித்துத் துடிக்கின்றன
என் விரல்களும் இதழ்களும்...

தானாய் விட்டுவிட
துவண்டு கிடக்கிறது
உன்னை பற்றியிருக்கும் ஆடைகள்...

பிம்பங்கள் இவையென
ஒரு விரலால்
அழித்துவிட்டு என்னை பார்த்து சிரிக்கின்றன
என் கனவுகள்...

கொண்ட காதலோ
மோகத்தை நீட்டிக்கிறது...

ஈர முத்தம்



சற்று ஒதுக்கிவிட்டு
ஒளியை பார்க்க ஆரம்பிக்கிறேன்
மூடியிருந்த பனியும்
அழகாகவே தெரிகிறது
உன் நினைவுகள்
ஓடி வந்து ஒட்டிக்கொள்கின்றன...

விடியாத போது
எனக்கு தெரியாது என நினைத்து
நீ கொடுத்த
அந்த ஈர முத்தம்
கதகதப்பாய் என் கன்னத்தின் ஓரத்தில்
சிலிர்க்க வைக்கிறது...

Tuesday 18 December 2012

காதல் ஓவியம்



என் மென்மலர்களால் உன்னை
வருடிவிட்டுக் கொண்டிருக்கையிலேயே
என் பாம்பு விஷம்
உன்னை பதம் பார்த்துக் கொண்டிருகிறது...

கட்டுக்கள் அவிழ்த்து
பறந்து போகையில்
என் காதல்
உனக்குள் சிறைபட்டுக் கிடக்கின்றது...

இலை வழியே
பூத்துக் குலுங்கிய உன் நேசம்
வேர் வழியே
உன்னை சருகாக்கி
விழுங்கி கொடியாக செழிக்கிறது
நீ அதில் படர்ந்துகொள்கிறாய் அழகிய பூவாக...

எட்டிப் பிடிக்க
துள்ளிக் குதிக்கும் கொடியிலிருந்து
தப்பிப் பறக்கும் பட்டாம்பூச்சி எண்ணங்கள்
வண்ணப் பூக்களின்
வாசனைத் தேனுக்கள்
மீண்டும் சிக்கிக்கொள்கின்றன...

என் இதயத்தோடு சேர்ந்து
உன் அனைத்து இதயமும்
தோரணம் கட்டிக்கொண்டன
உன்னை என்னுள் வரவேற்க...

அந்த மூலையில்
நான்
எப்போதும்போல் சோகமாக
உன்னை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்
பசியோடு...