Monday 28 February 2011

உன்னை தாண்டி செல்ல

இது முடியுமா 
உன்னை தாண்டி செல்ல 
என்னால் முடியுமா.....
உன் நினைவுகளை தாண்டி 
என் இதயத்தை அமைதியாக்கி 
உலக இயக்குத்துகுள் சகஜமாக வலம் வர முடியுமா...
எனது எல்லாமுமாய் 
எனது இன்பமாய் இருக்கின்றாய்....
வயிறு பசிக்கிறது...
மூளை சிரிக்கிறது...
கவலை இல்லை
உன் நினைவுகளின் இன்பத்தோடு இயங்கப் பார்கின்றேன்...
இது எனக்கு வரமாக....
என்றும் இன்பமாகவே இருந்து விட்டு போகிறேன்...
உன் நினைவுகளோடு...

நீதான் நான்
நீதான் எனது அன்பு..
நீதான் எனது இயக்கம்...
நீதான் எனது வேகம்...
நீதான் எனது இன்பம்....
நமது உலக வாழ்க்கையையும் 
உனது காதலின் அன்பு வடிவமைக்கும்...
இத்தனை தந்த அன்பு இதையும் தரும்...

இன்னும் அதிகமாய்
உன் மேல் அன்பு செய்கிறேன்...
உன்னுள் இருந்து
உன்னை மேலும் முழுதாய் புரிந்து 
நிறையவே காதலிப்பேன்...

என் அன்பே 
எனது வாழ்வின் ஒருத்தி நீ...
எல்லாமும் நீதான்...
முழுவதுமாய் காதல் செய்கிறாய்...
என்றும் எனக்காய்....

காதலின் காமம்

என்னவெல்லாம் செய்கிறது உன்னோடு நான் கொண்ட காதல்....
மோகம் சொல்லி கொடுக்கிறது...
அந்த மோகத்தில் வந்த காமம் உன்னை முழுதாய் கேட்கிறது.....
ஏதோதோ செய்கிறாய்.....
எங்கெங்கோ தொடுகிறாய்
என் மயிர் கால்கள்கூட உன்னை எட்டி பார்கின்றன
மொத்தமாய் உன்னிடம் என்னை தொலைத்தேன்
தொலைத்த என்னை உன்னுள் தேடுகிறேன்....
உன்னை தீண்டச் சொல்லி விரல் நுனிகள் கெஞ்சுகின்றன
என் இதழ்களோ...
உன்னை முத்தமிட துடிக்கின்றன
உன் இதழ் ருசிக்க
உன் காது மடல்களில் காதல் பேச
உன் கழுத்து நரம்புகளில் கவிதை படிக்க
ஆசை கொள்கிறது....
இடையூடே இறுக்கி அனைத்து...
இல்லாத இடைவெளியை வெளியேற்றி
இந்த காதல் காமம் கொள்ள சொல்கிறது....

Sunday 20 February 2011

யாரடி நீ எனக்கு...


இந்த உணர்வு எனக்கு புதிது
இனிதாய் இருந்தாலும்
நிறைய குழப்பம் தருகிறது....

நட்பு என்று சொல்லி நிறுத்தி கொள்ள முடியவில்லை....
காதல் என்று வரையறுத்து
கட்டுக்குள் வரவும் தைரியம் இல்லை...

நீ இல்லாமல் இனி என் வாழ்வு இல்லை
இந்த உணர்வுக்கும்
உறவுக்கும்...
என்ன பேர் இருந்தால் என்ன....
நீ என்னோடு வேண்டும்...

உனக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடிக்கும்....
நீ வேண்டுவது எல்லாம் நான் செய்வேன்....

உன் குரல் கேட்கா நாட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்....

என் தலை சாய்த்துக் கொள்ள உன் தோள் வேண்டும்....
நீ தலை சாய்த்துக் கொள்ள என் தோள் என்றும் தயாராய் இருக்கும்....

Friday 18 February 2011

முத்த மழையில்

முத்த மழையில் 

எண்ணி விடலாம் இது வரை நான் பெற்ற முத்தங்களை...எனது மாமி என்னை கட்டி பிடித்து எனது உச்சந் தலையில் கொடுத்த முத்தம்...அதில் இருந்த அன்பு...பாசம்...

காதல் செய்த கோலம்

என்னவெல்லாம் செய்தது இந்த காதல்...நீ என்னை புரட்டி போட்டாய்....நிறைய அமைதி தந்தாய்

என்னை எனக்கே பிடிக்க வைத்தாய்...என்னை சுற்றி எல்லாம் அழகாய் தெரிந்தது...வாழ்க்கை இனிக்க துவங்கியது.....எல்லோருக்கும் என்னை பிடித்தது....எந்தன் சிரிப்பில் உயிர் கலந்தது....அது அடுத்தவரையும் தொற்றிக் கொண்டது....

நடக்கின்றேன்.... நிற்கின்றேன்....ஏதும் செய்யாமல் உட்கார்திருக்கின்றேன்.... எல்லாம் சுகமே....

பகிர்ந்து கொள்ள ஏதுமில்லையா...எத்தனை முறை கேட்டிருப்பார் என்னை சேர்ந்தவர்....அன்பிருந்தால்....காதலின் பித்திருந்தால் எல்லாம் சொல்லத் தோன்றும் போல்....நடந்து செல்லும் பொது பார்த்த அந்த குழந்தையின் சிரிப்பை உன்னிடம் சொல்லி உன் சிரிப்பை ரசிக்க ஆசை பட்டேன்...

என்ன செய்தாய் என்னை....

நீ கொடுத்த இந்த உணர்வு 
நான் இருக்கும் வரை என்னோடு இருக்கும்....
இந்த ஒன்று...
இதுவரை நான் உணர்ந்திடாத ஒன்று
உன்னிடம் மட்டுமே உணர்ந்த அன்பு...

இது சுகமா வலியா...
எனக்கு தெரியவில்லை.....
ஆனால் பிடித்திருக்கிறது....

எதுவும் நிலையில்லை என்று என் மூளை சொல்கிறது...
நீயும்.....
உன் மேல் நான் கொண்ட காதலும்...
என் வாழ்நாள் முழுதும் நிலைக்க வேண்டி 
என் மனம் வேண்டுகிறது....

இது என் வழக்கம்...
என் வழி வரும் அன்பை...
பட்டாம்பூச்சியாய் பறக்க விட்டு...
திரும்பி வருவதை கெட்டியாக பிடித்து கொள்வேன்
எனக்கே எனக்கு என்று இருந்தால்.....
என்னிடம் வந்து சேரும்....
வந்து சேர்த்தவை இன்றும் என்னுடம்...
உன்னையும் பறக்க விட்டிருக்கிறேன்...
நீ என்னோடு என்பது தெரிந்தும்....

நீ யாராய் இருந்தாலும்...
என்னவாக இருந்தாலும்...
எப்படி இருந்தாலும்...
நான் உன்னை காதலிக்கிறேன்...காதலிப்பேன்.....
முழு முதலாய் காதலிப்பேன்....
உன்னை நீயாகத்தான் காதலிக்கிறேன்....

உனக்காக என்றும் நான் இருப்பேன்...
யாரும் இல்லை என்ற உணர்வு வேண்டாம்
சாய்ந்து கொள்ள தோள் கிடைக்காத போது....
நீ நீயாக இருக்க விரும்பும் போது....
உனது கோபத்தை கொட்டி தீர்க்க....
உனது சோகத்தை சொல்லி அழ...
உனது சந்தோசத்தை கூடி கொண்டாட...
உனது மோகத்தையும் காமத்தையும் கட்டி அணைக்க...
உனக்காகவே நான் இருக்கிறேன் காதலே....

உன்னவன் நான்...
உனது பொறுப்புகளின் சுமையை என்னிடம் விட்டுவிடு...
எல்லாம் உன்னை கை விட்டாலும்...
நான் இருக்கிறேன் அன்பே....
கடைசிவரை உன்னுடன் நானிருப்பேன்....

உனக்காக நானிருப்பேன் அன்பே
என் காதலியே...
உனதானேன்....நீயானேன்.....

Thursday 17 February 2011

காதலின் வலி

காதல் சுகமாய் இருந்தது....எளிதாக தெரிந்தது....நீ அன்று விடை பெற்று செல்லும் வரை....அந்த பிரிவு கொடுத்த வலி மிகக் கொடுமை....இத்தனைக்கும் நீ உணர்வில் என்னோடுதான் இருந்தாய்...இரண்டு நாள் நரக வேதனை....உன்னை பார்த்து விட வேண்டும் என்று இருந்தேன்.... முடியவில்லை....பேச எத்தனித்து தொலைபேசி அழைப்புக்கும் பதில் இல்லை.....இது வரை நான் அனுபவித்தது இல்லை....என்ன வேலையோ உனக்கு....பதில் ஏதும் இல்லை எனக்கு....வினாடிகளில் பதில் வரும் குறுஞ் செய்திகளுக்கும் பதில் ஏதும் இல்லை...என் மனம் இப்படி கலக்கமுற்றது இல்லை....கலங்கி நின்றதும் இல்லை....என்னை குலைத்து போட்ட எனது வாழ்வின் அந்த சம்மட்டி அடியின் போது கூட நான் தெளிவாய் இருந்தேன்....நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு தெரிந்து செய்தேன்...ஆனால் இன்றோ உட்கார்ந்தது உட்கார்ந்தபடி....ஏது செய்கிறேன் என்பது தெரியாமல்...

 

எனக்கு நானே பதில் தெரியாத கேள்விகளை கேட்டு கொண்டேன்...இந்த மாற்றம் என்னை கொஞ்சம் மிரட்டி பார்த்தது....உன்னோடு நான் கொண்ட காதலின் வயது என்ன.... இந்த காதலின் ஆழம் என்ன... இந்த காதலுக்கான எனது பொறுமையின் எல்லை என்ன... நீ உண்மையிலேயே என்னோடுதான் இருக்கிறாயா.... எல்லைகளை கடந்து நான் உனக்கு தொந்தரவு ஆகிறேனா...இன்னும் எத்தனை எத்தனை கேள்விகள் என்னுள்ளே....நானே எனக்கு இனிமையான பதில்களை சொல்லி தேற்றிக் கொண்டேன்...நீ இல்லாத போது.... நான் இது வரை இப்படி ஒரு உணர்வை அறிந்ததில்லை....இந்த உணர்வு கண்டிப்பாய் உண்மை....காமம் மட்டும் என்றால் எனது மனதிற்கு  வலி தெரிந்திருக்காது.... உனது கண்களில் உன்னோடு இருந்த காலங்களில் உண்மையான அன்பை பார்த்தேன்.....என் தோள் தேடும் அந்த ஏக்கம் உணர்ந்தேன்...அதில் உண்மை மட்டுமே இருந்தது.....இப்படிதான் என்னை தேற்றிக் கொண்டேன்...

 
காதல் இப்படி எல்லாம் வலி கொடுக்கும் என்பது இன்றுதான் தெரிந்து கொண்டேன்...எனது பள்ளி இறுதி ஆண்டில் நுழைவுத் தேர்வு வகுப்பின் கடைசி நாள் வகுப்பு முடிந்து வெளி வந்த போது ...அந்த வகுப்பில் இருந்த ஒரு தேவதையின் பிரிவை நினைத்து ஏற்பட்ட வலி ஏனோ தெரியவில்லை நினைவில் வந்து போனது.....அன்று அந்த வலி தந்த வேதனை என்னை காதலின் பக்கம் எட்டி பார்க்காமல் வைத்தது...ஆனால் இன்று முழுதாய் மூழ்கி நிற்கிறேன்.....


அத்தனையும் காணாமல் போனது உன் குரல் கேட்ட வினாடி...எனது குழப்பங்கள் அர்த்தமற்றதாகி போனது....நெஞ்சில் இருந்த வலி சுகமே மாறி பட்டாம்பூச்சி படபடத்தது.....ஏதும் இல்லாதவன்....எல்லாம் கொண்டவனானேன்....பேசினோம் பேசினோம் ஏதும் இல்லாமல் பேசிகொண்டே இருந்தோம்...குழப்பத்தில் காலை சாப்பிடவே இல்லை...உன் பேச்சு கொடுத்த மகிழ்ச்சியில்....மதியமும் பசிக்கவில்லை....இதுதான் காதலா...தெரியவில்லை... அனுபவிக்க மட்டும் செய்கிறேன்..

ஒரு ஆணின் காதல்

எத்தனையோ எண்ணங்கள்.....நீ என்னை முத்தமிட்ட தருணத்தை இருத்தி வைக்க முடியுமா???உன்னை அருகில் அமர்த்தி இருளில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன்....வந்து போவோர் எல்லாம் நம்மை பார்த்து செல்ல நானோ அந்த இருளின் முடிவில் என்னை தேடிக் கொண்டிருந்தேன்....பல பல குழப்பங்கள்....உன் கண் பார்த்தே கொடுத்திருக்க வேண்டிய முத்தம் அது....நீ கேட்டும் அந்த பரவச படபடப்பு என்னை தடுமாற வைத்தது....ஒரு முத்தத்தைகூட........உன் கை கோர்த்து இடை சேர்த்து அந்த அலைகளின் ஓரத்தில் அளவளாவி இருக்கலாம்....எண்ணங்கள் ஓடினாலும் நான் ஏன் அப்படி அமர்ந்திருந்தேன்...உன் முகம் பார்த்து என்னை மறந்திருந்தேன்....நீ உன்னை சொல்லிய போது...உனது வாழ்கையின் இருளை என் முன் விவரித்த போது உன் மேல் நான் கொண்ட காதலில் மரியாதையும் கலந்து கொண்டது....எந்தத் தருணத்திலும் கட்டுப்பாடு இழந்து விடக்கூடாது என்பது ஓடிக்கொண்டே இருந்தது.....

திரும்பி நடக்கையில்தான் எதனை போராட்டம் என்னுள்...உன் கை கோர்த்து நடப்பதா...இடையை இழுத்து அனைத்து நடப்பதா...பைத்தியமாகவே ஆகிப் போனேன்...ஏனோ தெரியவில்ல...என்னை விட்டு இரண்டு அடி தள்ளியே நடந்து வந்தாய்...நான் அருகில் வந்தாலும் நீ தள்ளி போவதாய் எனக்கு தோன்றும்....இது மாயையா இல்லை நீ செய்த மாயமா??? நீ மட்டுமே அறிந்த ரகசியம்...எங்கே நான் உடைந்து விடுவேனோ....என்னை இழந்து விடுவேனோ....இந்த பயம் உன்னோடு வர விடாமல் என்னை தடுத்து விட்டது....


இவையெல்லாம் புதிதாய் உணர்கிறேன்.....நீ போனதும் அந்த வெறுமை....காதல் செய்த மோகம் என்னை கொல்ல துவங்கியது.....எனக்கு நானே அந்நியமாகிப் போனது இதுவே முதல் முறை...குழப்பங்கள் அத்துணை தீர்மானமாய் ஆட்சி செய்தது....காதல் செய்த குழப்பம் எல்லா வேலைகளையும் தள்ளி வைக்க செய்தது....மூளை வேலை செய்ய மறுத்தது....கையும் காலும்...ஏன் முழு உடலும் மூளையின் கட்டுப்பாட்டில் இல்லை....மனமோ உன்னில் மூழ்கி உன்னை மட்டுமே நினைத்திருந்தது....என்னென்னவோ ஆகி போனேன்....அன்றைய இரவு உன் நினைவோடு ஒரு புது அனுபவம்.....சுகமாய்....நீ என்னவள் என்ற நினைவோடு.....

காதல் தந்த காமம் இனிமைதான்....காமம் தாண்டி ஒரு சுகம் உண்டென்று அன்று தெரிந்து கொண்டேன்....உன்னை முழுவதுமாய் தின்றுவிடதான் துடித்தேன்.....

Wednesday 16 February 2011

கை பிடித்து

எப்படி வந்தாய்...ஏன் வந்தாய்...ஏதும் தெரிய வில்லை.. சட்டென வந்து சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டாய்....இல்லை...இனி இல்லவே இல்லை என்று இருந்த காதல்....மீண்டும் முழுவதுமாய் வந்து இம்சிக்கறது உன்னாலே...சுகமாக இருந்தாலும்...சிறு அச்சமாகவே இருக்கிறது....

எனக்கு தெரியும் நான் சரியான பைத்தியக்காரன் என்று...அதனாலேயே அணைத்து கதவுகளையும் அடைத்து வைத்திருந்தேன்....நிலா பார்த்து....கடல் ரசித்து வெகு வருடங்கள் ஆகின்றது....இது எல்லாம் இப்போது புதிதாய் தெரிகிறது....தென்றல் தவழ்வது....பட்டாம்பூச்சியின் படபடப்பு....நட்சத்திரத்தின் கண்சிமிட்டல்.... பூவின் வாசம்... அனைத்தும் அழகாய் புரிகிறது....

நானே என்னை புதிதாய் பார்கிறேன்....இத்தனை நாள் இந்த நான் எங்கிருந்தேன்....என்ன செய்திருக்கிறாய் எனபது உனக்கு புரிகிறதா....எப்போது உணர்தேன் என்னுள் உன்னை....விடை தெரியா கேள்வி இது....அழகாய் சிரிக்கும் அந்த அதிசய கண்கள்...அமுதாய் விரியும் அந்த இனிய இதழ்கள்....கபடமற்ற அந்த சிரிப்புநூடே அந்த முகம் நேரெதிரே என் முன்னால்....கொள்ளை கொண்டு போனாய் என்னை...."நான் அழகா" என்று நீ கேட்டாய் எனக்கு பதில் தெரியவில்லை....எனக்கு நான் எப்போதும் அழகுதான்.....இது முதல் சந்திப்பு....அதுவும் எதிர்பாராமல் எதேச்சையாக.... இப்படியும் சாத்தியமா...

நீ என் கை பிடித்த தருணங்கள் நான் என்னை இழந்தேன்....உன் இதழ் சுழிப்பு என்னை இறுக்கிப் போட்டது.... எத்தனைதான் வளந்திருந்தாலும் நீ சிறு பிள்ளையாகவே தெரிகிறாய்....கடல் மணலில் கோடு போட்ட நிமிடங்கள் என்றும் நிலைக்கும் புதிய இனியவை.....அவன் தேடி கொடுத்த சிப்பியில் மணலை பிரிக்கையில் எத்தனை யுகங்கள் கடந்து உன்னிடம் வந்தேன்...பட்டாம்பூச்சி என் இதயத்தை தூண்டி விட்டு போன தருணங்கள் அவை....என் உள்ளத்தை, முத்தமிடும் சாக்கில் என் விரல்கள் உன்னவையிடம் சொல்லின....முத்தமிட்டு கொண்ட உனது விரல்கள் உன்னிடம் அவற்றை சொல்லிற்றா என்று எனக்கு தெரியவில்லை...

உன் கை கோர்த்து மணல் கடந்தபோது எண்ணத்தில் ஆயிரம் ஓட்டங்கள்.....இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே அமர்ந்து உன்னை நீ சொல்லி முடித்த போது.....நீதானா அது....என்னவள் நீதானா.....இந்த சிந்தனையை என்னுள் விதைத்துவிட்டு நீ நடந்து போய் விட்டாய்...நீ வருவாய் என நான் இன்னும் அங்கேயே அமர்ந்து இருக்கிறேன்......

நீ உடுத்தி இருந்த அந்த புடவை உன்னை விண்ணின் தேவதையாக்கியது.....உந்தன் முத்தம் என்னை இல்லாமலே செய்து விட்டது....ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இந்த உறவு எனக்கு நிலைக்க வேண்டும் என்று நினைக்கையில்....உனது சங்கடங்கள் தீர வேண்டும்....உனது சிரிப்பிற்கு நானும் ஒரு காரணமாக வேண்டும்....இதுதான் நான் விழைவது....ஒரு சிறு அமைதி....வாழ்கயின்பால் ஒரு துளி நம்பிக்கை ....இதையாவது உனக்கு கொடுக்க நினைக்கின்றேன்....

மீண்டும் காதலும் கலையும்

இப்போதெல்லாம் நிறைய படிக்கிறேன்
நிறைய கவனிக்கிறேன்
வெகு நாட்களாகி விட்டது
நான் தமிழ் எழுதி
அதைவிட
வெகு நாட்கள் ஆகி விட்டது
காதல் உணர்வு கொண்டு...

காதல் வந்தது
உடன் தமிழும் எழுத சொன்னது
அழகாய்
ருத்ரம் எழுதிக் கொண்டிருந்தவன்தான்
அன்பாய்
காதல் சொல்லிக் கொண்டிருந்தவன்தான்...

வாழ்க்கை புரட்டி போடும் போது
எல்லாம் கலைந்து போகிறது
இந்த காசு படுத்தும் பாடு
காதலை மட்டும் அல்ல
கலையையும் காணாமல் செய்கிறது....

எங்கே தொலைத்தேன் என்னை
வெகு நாட்கள்
இரவின் இருட்டில் தேடியது உண்டு
களைத்துப் போன தருணங்கள்
நிறைய உண்டு
சலித்துப் போய்
இவ்வளவுதான் என்று
என்னை நிலைத்திருந்த போது....

எங்கிருந்தோ வந்து
என்னை கலைத்துப் போட்டாய்
உடன்
என்னுள் இருந்த கலையும்
உயிர்த்துக் கொண்டது...

நீ
என்னுள் வந்து அமர்ந்ததாலோ
அல்லது
பரிணாம வளர்சியாலோ
முன்னரெல்லாம்
எண்ணங்கள் சீராய் வந்தபோது
எழுத்துக்கள் பிடிபடாமல் இருக்கும்
பின்னர் வார்த்தைகள் வசப்பட்ட போது
எண்ணங்கள் சீரியதாய் இருந்தது இல்லை
இப்போது எண்ணமும் வார்த்தைகளும்
இயைந்து வருகின்றன....