Wednesday 16 February 2011

கை பிடித்து

எப்படி வந்தாய்...ஏன் வந்தாய்...ஏதும் தெரிய வில்லை.. சட்டென வந்து சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டாய்....இல்லை...இனி இல்லவே இல்லை என்று இருந்த காதல்....மீண்டும் முழுவதுமாய் வந்து இம்சிக்கறது உன்னாலே...சுகமாக இருந்தாலும்...சிறு அச்சமாகவே இருக்கிறது....

எனக்கு தெரியும் நான் சரியான பைத்தியக்காரன் என்று...அதனாலேயே அணைத்து கதவுகளையும் அடைத்து வைத்திருந்தேன்....நிலா பார்த்து....கடல் ரசித்து வெகு வருடங்கள் ஆகின்றது....இது எல்லாம் இப்போது புதிதாய் தெரிகிறது....தென்றல் தவழ்வது....பட்டாம்பூச்சியின் படபடப்பு....நட்சத்திரத்தின் கண்சிமிட்டல்.... பூவின் வாசம்... அனைத்தும் அழகாய் புரிகிறது....

நானே என்னை புதிதாய் பார்கிறேன்....இத்தனை நாள் இந்த நான் எங்கிருந்தேன்....என்ன செய்திருக்கிறாய் எனபது உனக்கு புரிகிறதா....எப்போது உணர்தேன் என்னுள் உன்னை....விடை தெரியா கேள்வி இது....அழகாய் சிரிக்கும் அந்த அதிசய கண்கள்...அமுதாய் விரியும் அந்த இனிய இதழ்கள்....கபடமற்ற அந்த சிரிப்புநூடே அந்த முகம் நேரெதிரே என் முன்னால்....கொள்ளை கொண்டு போனாய் என்னை...."நான் அழகா" என்று நீ கேட்டாய் எனக்கு பதில் தெரியவில்லை....எனக்கு நான் எப்போதும் அழகுதான்.....இது முதல் சந்திப்பு....அதுவும் எதிர்பாராமல் எதேச்சையாக.... இப்படியும் சாத்தியமா...

நீ என் கை பிடித்த தருணங்கள் நான் என்னை இழந்தேன்....உன் இதழ் சுழிப்பு என்னை இறுக்கிப் போட்டது.... எத்தனைதான் வளந்திருந்தாலும் நீ சிறு பிள்ளையாகவே தெரிகிறாய்....கடல் மணலில் கோடு போட்ட நிமிடங்கள் என்றும் நிலைக்கும் புதிய இனியவை.....அவன் தேடி கொடுத்த சிப்பியில் மணலை பிரிக்கையில் எத்தனை யுகங்கள் கடந்து உன்னிடம் வந்தேன்...பட்டாம்பூச்சி என் இதயத்தை தூண்டி விட்டு போன தருணங்கள் அவை....என் உள்ளத்தை, முத்தமிடும் சாக்கில் என் விரல்கள் உன்னவையிடம் சொல்லின....முத்தமிட்டு கொண்ட உனது விரல்கள் உன்னிடம் அவற்றை சொல்லிற்றா என்று எனக்கு தெரியவில்லை...

உன் கை கோர்த்து மணல் கடந்தபோது எண்ணத்தில் ஆயிரம் ஓட்டங்கள்.....இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே அமர்ந்து உன்னை நீ சொல்லி முடித்த போது.....நீதானா அது....என்னவள் நீதானா.....இந்த சிந்தனையை என்னுள் விதைத்துவிட்டு நீ நடந்து போய் விட்டாய்...நீ வருவாய் என நான் இன்னும் அங்கேயே அமர்ந்து இருக்கிறேன்......

நீ உடுத்தி இருந்த அந்த புடவை உன்னை விண்ணின் தேவதையாக்கியது.....உந்தன் முத்தம் என்னை இல்லாமலே செய்து விட்டது....ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இந்த உறவு எனக்கு நிலைக்க வேண்டும் என்று நினைக்கையில்....உனது சங்கடங்கள் தீர வேண்டும்....உனது சிரிப்பிற்கு நானும் ஒரு காரணமாக வேண்டும்....இதுதான் நான் விழைவது....ஒரு சிறு அமைதி....வாழ்கயின்பால் ஒரு துளி நம்பிக்கை ....இதையாவது உனக்கு கொடுக்க நினைக்கின்றேன்....

No comments:

Post a Comment