Wednesday 23 November 2011

மணலின் மடியில்


என் காதலியே
என்னவளே
எங்கே இருக்கின்றாய்
என்னுள்ளே
பத்திரமாகத்தானே இருக்கின்றாய்...

வாயேன்
கை கோர்த்து
ஒரு நடை போட்டுவிட்டு வருவோம்
தோள்கள் முத்தமிட்டுக்கொள்ள
காற்றுக்கு வலிக்காமல்
அதனூடே புகுந்து
மெல்ல மெல்ல
அந்த கடற்கரையோரம்
கதை பேசி
நடந்துவிட்டு வருவோம்...

மணலின் மடியில் அமர்ந்து
அலை ரசிப்போம்
அந்த அலை வழியே
நம் எண்ணங்கள்
கைகோர்த்து
சுற்றி வரட்டும்
இந்த உலகம் முழுதும்
அதுவரை
இந்த மனங்கள்
மௌனம் பேசி
மகிழ்ந்திருக்கட்டும்
என் கைகளில்
உன்னவை
அமைதியாய் பாதுகாப்பாய்
உன் தலை
என் தோளோடு
இது ஒரு மோன நிலை
வார்த்தைகள் இல்லை
உணர்கிறோம்...

13 comments:

ISR Selvakumar said...

அருமை..

சின்ராஸ் said...

சூப்பர் தல:-)

Nathan said...

@Selvakumar Sir,

நன்றி...

Nathan said...

@Loganathan

மகிழ்ச்சி.. :)

சி.பி.செந்தில்குமார் said...

>>இது ஒரு மோன நிலை

நித்யானந்தா ரசிகர் போல ஹே ஹே ஹேய்

Nathan said...

@ சி.பி.செந்தில்குமார்,

தல... அதுக்கு அர்தத்தையே மாத்திடுவீங்க போல.. :)

அம்பலத்தார் said...

அருமையான வரிகளில் நல்ல கவிதை

Nathan said...

நன்றி அம்பலத்தார் அவர்களே...

arasan said...

கவிதை அருமை .. வாழ்த்துக்கள்

Ranioye said...

அருமை !

Nathan said...

@அரசன்,

மகிழ்ச்சி :)

Nathan said...

@ராணி,

மகிழ்ச்சி.. :)

சசிகலா said...

ந‌ல்ல‌ ப‌திவு. ந‌ன்றி!

Post a Comment