Tuesday 8 November 2011

கருப்பு வெள்ளை தேவதை


கருமை உருவில்
வெள்ளை உடையில்
தேவதையாக
அதோ அவள்
திரும்பிப் பார்த்து
ஒரு மோகனப் புன்னகையாலே
என்னை வா என்கிறாள்
ஒளியென
ஒரு வழித்தடம்
எனக்காக
பதித்து போகிறாள்...

அதோ என்னவள்
சூரியனால் கூட முடியவில்லை
மறைக்க முயன்ற மேகத்தை கிழித்து
ஒற்றை கீற்றாய்  
எட்டிப் பார்க்கின்றான்
பச்சை நிற
மரங்கள் எல்லாம்
அவளை காணவோ
அத்தனை கோடி நிறங்களையும்
தன்மேல்
வாரி இறைத்துக் கொண்டன...

இலையுதிர்கால
இலைகளும் மரங்களும்
கட்டிய
பல வண்ணக் கோட்டையில்
மறுக் கோடியில்
சூரியன்
ஒளிரச் வைத்த தேவலோகத்தில்
என் தேவதை
கருப்பு வெள்ளையில்
என்னை பார்த்து சிரிக்கிறாள்
ஒளிர்கிறாள்...

1 comment:

அ.முத்து பிரகாஷ் said...

கருப்பு வெள்ளை தேவதையென உருவகமாய் ஏதோ சொல்கிறானோ கவிஞன்..

என்னவாக இருக்கக் கூடும்..

வர வர என்னாயிற்று இவருக்கு..
நன்றாக எழுதுகிறாரே.

Post a Comment