Saturday, 29 October 2011

என்னவோ செய்கிறாய்

என்னவோ செய்கிறாய்
ஏதேதோ ஆகிறேன்
என்னுள்ளே விழுந்து
எல்லாமுமாய் கலந்து...

உன் தீண்டல் சுகம் தெரியாது
இருந்தும்
ஏங்கித்தான் போகின்றன
என் அத்தனை அணுக்களும்...

வா வந்து
எனை ஏந்திக்கொள்
முழுவதுமாய் படர்ந்துவிடு
என் மோகத்தை தின்றுவிடு
என்னுள்
காதலில் கலந்தவளே...

2 comments:

ஆமினா said...

//அனுக்களும்...//

அணுக்களும் என்றிருக்க வேண்டுமோ??

கவிதை அருமை

அ.முத்து பிரகாஷ் said...

<>


அத்தனை 'அனு'க்கள் அவருக்கு இருக்குமோ என்னவோ.. அவரே அறிவார்.. :))

Post a Comment