Monday 6 June 2011

கால இயந்திரம்


உனக்கான நான்
அப்படியேதான் இருக்கிறேன்
இந்த கால இயந்திரத்தை
இங்கேயே நிறுத்தி வைக்கிறேன்
சாவி உன் கையில்.....
தோலுறித்து
புது அவதாரம் எடுக்கின்றேன்
உனக்கு வேண்டிய
உன் தோழனாய்...

1 comment:

Ranioye said...

நீ நீயாகவே இரு
தோலுரிக்கவும் வேண்டாம்
மார் கிழிக்கவும் வேண்டாம்
நீ நீயாகவே இரு...!
தோழனாய் தோள்கொடு...
அன்னையாய் மடி கொடு...
பிள்ளையாகி உன் விரல்
பிடித்து நடக்கும்
வரம் கொடு...!
நீ நீயாகவே இரு...!

Post a Comment