Thursday 2 June 2011

வின்னிலிருந்து வந்த தேவதையோ

இது எனக்கான
ஒத்தையடி பாதை
நட்ட நடு நிசியில்
யாரும் அற்ற வனாந்தரத்தில்
எனகான பாதையில்
மோகம் கொண்டு
முதமிட்டுக் கொள்ளும்
மரங்களின் க்ரீச் சத்தத்தோடு
தன் கூடு தேடும்
காற்றின் ஊளையும்
வழியெங்கும்
என் சோம்பலின் தயவில்
மண்டிகிடக்கும்
புதரும் முள்ளும்
தாண்டி
ஏகாந்தத்தில் அமரும்
எனக்கான இட்த்திற்கு
மெல்ல மெல்ல
நீந்திப் போகையில்
கண்கள் கூசும்
பால் வெள்ளை ஒளியில்
யாரது
அந்த புல் மெத்தையில்...
தோட்ட்த்தில் பட்டாம்பூச்சி பிடிக்கும் சிறுவனாய்
மெல்ல அருகில்
யாரிவள்
வின்னிலிருந்து வந்த தேவதையோ
பார்த்ததுமில்லை படித்ததுமில்லை
அத்த்னை அழகு
இந்த வனாந்தரத்தில்
பத்திரமாய் ஏந்திக்கொண்டேன்
என் கைகளில்...
குளத்தில் சேர்க்கும்வரை
பத்திரமாய்
என் கையகளக் குட்டையில்
ஏந்திச் செல்லும் மீன்போல
உன்னையும் ஏந்தி
உனக்கான உன்னிட்த்தில்
சேர்பிப்பேன்
தேவதையே....

1 comment:

Ranioye said...

எனக்கான என் இடம்
உன் இதயமின்
எங்கு கொண்டு
எனை எனை சேர்ப்பாய்?
பத்திரமாக இருப்பேன்
என்றுதானே என்னை
உன்னிடத்தில் சேர்த்தான்??
வெண்ணிலா மண்ணில் வந்தாள்
கண்கள் கூசும் ஒளியோடு...!
உணர்ந்து கொள்ளாமல்
உதறிவிட்டு போவதேன் ???

Post a Comment