Friday 23 December 2011

நீ புன்னகைக்கு பிறந்தவளோ


நீ வீசிச் செல்லும்
அந்த புன்னகைப் பூக்கள்
என் மீது பட்டுத் தெறிக்கும்
முதல் மழையாய்
என்னை சிலிர்க்க வைக்கிறது...

நீ புன்னகைக்கு பிறந்தவளோ
உன்னில்
இப்படி நிறைந்து இருக்கிறது அது
எப்போதும் எங்கேயும் வசீகரிக்கிறாய் ...

உன் கண்ணில் நிறைந்து வழியும்
அந்த குறும்பு
உன் இதழில் இறங்கி
புன்னகையாய் சிரிக்கும்போது
நான் சிறைபட்டு போகின்றேன்...

தூக்கத்தில் இருந்த என்னை
எழுப்பி உட்கார வைத்து
சிரித்து சிதறடிக்கிறாய்
என் கனவில்...

ஒவ்வொரு முறை
நீ சிரிக்கும்போதும்
உன் கன்னத்தில்
சிவந்து எழும் அந்த மேடுகளிலும்
விழும் அந்த சின்னக் குழிகளிலும்
நான் தடுமாறி விழுகின்றேன்..

நீ எங்கிருந்தாலும்
உன் புன்னகையை நினைக்கையில்
என் முகம்
தானாய் மலர்கிறது
ஒரு புன்னகையாய்...

உன்னில் பொங்கும்
அந்த வெள்ளை புன்னகையில்
என்னை மறந்து போவதும்
சுகமாய் இருக்கிறது...


7 comments:

Admin said...

நீ புன்னகைக்கு பிறந்தவளோ?

பெண்மையிடம் அழகான கேள்வி..


வாக்கு (TM-1)

அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

சசிகலா said...

தூக்கத்தில் இருந்த என்னை
எழுப்பி உட்கார வைத்து
சிரித்து சிதறடிக்கிறாய்
என் கனவில்...
அனுபவ வரிகள் நன்றாக உள்ளது .

Marc said...

"உன்னில் பொங்கும்
அந்த வெள்ளை புன்னகையில்"

புன்னனகைக்கும் வண்ண மடிக்கும் தங்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள்.

Nathan said...

@மதுமதி,

மகிழ்ச்சி :)

Nathan said...

@சசிகலா,

மகிழ்ச்சி :)

Nathan said...

@தனசேகரன்,

மகிழ்ச்சி :)

TamilTechToday said...

Nice & Useful Info. Please Follow My Website too!


A to Z general Knowledge Information Portal Just Visit - www.bharathibtech.com

Post a Comment