Monday 12 September 2011

அன்று பூத்தவளாய்


கதிரவனை காண வெட்கி
நிலவு ஓடி மறைந்த கோவத்தில்
சிவந்த அந்த சூரியன்
என் அறைக்குள் எட்டி பார்க்க
போர்வைக்குள் நடந்த
கைகலப்பை விட்டு ஓடினாய்
கைகெட்டியதை போர்த்திக் கொண்டு
குளியறைக்குள் தஞ்சம் புகுந்தாய்...

உனக்குத் தெரியாமல்
எனக்கும் தெரியாமல்
என் கண்கள் இரண்டும்
உனது குளியல் அறையில்
உன் குளியலுக்காக
என் கற்பனைக்ளோடு காத்து இருக்கின்றன...

எத்தனை முறை ரசித்தாலும்
அன்று பூத்தவளாய்
என்றும் அதிசயங்களுடன்...
நிர்வாணம்
இத்தனை அழகா...

உன் வாசம்
என்னை மூர்ச்சையாக்குகிறது
அன்று பிறந்தவளாய்
நீரை உடுத்திக் கொள்கின்றாய்...

உன்னை முழுவதும் அணைத்துக் கொண்ட
மயக்கத்தில்
மிதப்பில் மிதக்கின்றன
நீர்த்துளிகள்...
உடலெங்கும் வழிந்தோடி
விளையாடுகின்றன

குளிக்கின்றாயா
இல்லை மீண்டும் உன்னை
செய்து கொள்கின்றாயா
அத்தனை நேர்த்தியாக
உன் தேகத்திற்கே நோகாமல்...

உன் குளியலறை குளத்திலிருந்து
தாமரை மொட்டாய்
நீராடையை விலக்கிக் கொண்டு
எழுகின்றாய்...

இதுவரை விளையாடிய
நீர்த்துளிகள்
உனை விட்டு பிரிய
மனமில்லாமல்
அடம் பிடித்து
உன் மேனியெங்கும்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
நீர் முத்துக்களாய்...
நீ
ஜொலிக்கின்றாய்...


நீ விட்டு நடக்கையில்
உன் காலடியில்
அவை மரணிக்கின்றன
பாதச் சுவடுகளாய்...

இது புது வாசம்
மார்புக்கு கட்டியிருந்த
துண்டை விட்டொழித்து
மீண்டும் நிர்வாண ஆச்சர்யம்
என் கண் முன்னே...

உடைக்குள்ளே
உன் இடை புகுத்திக் கொள்ளும் வரை
விடாது தொடரும்
என் பார்வையும் கருத்தும்...

கண் விழித்து பார்க்கையில்
கண் முன்னே நீ
ஈரத் தலையோடு
மலர்ந்த முகத்தோடு
புது வாசத்தோடு



3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

மோகத் தீயை கொன்று விடு..

அன்றால் உந்தன் மூச்சை...

அ.முத்து பிரகாஷ் said...

காதல் என லேபிளில் பிழையாகவோ / கவனக் குறைவாகவோ..

Ranioye said...

Arumai

Post a Comment