Wednesday 8 August 2012

முடிக்கப்படாத உன் வார்த்தைகள்


உன் உடையின்
முடிச்சவிழ்க்கும் அவகாசத்தில்
நீ விடும் மூச்சுக் காற்று
என் காது மடலோரம்
சூடேற்றி சில்லிட வைக்கிறது
உனது மோக முனகல்கள்
செல்லமாய் என் செவிகளை
தழுவிக்கொள்கின்றன...

தொங்கி நிற்பது
மிச்சமிருக்கும் உன் முத்தங்களா
இல்லை
முடிக்கப்படாத உன் வார்த்தைகளா...

மாட்டிக் கொண்டு
விடமாட்டேன் என அடம்பிடிக்கும்
கொக்கி தரும்
அவசர அவஸ்தைகள்...

கையை மெல்லப் பிடித்து
பின் மெல்ல மெல்ல
எல்லைகள் கடந்து
இல்லாமல் போவது
மயக்கம்...

நழுவும் விரலுக்கடியில்
வழுக்கும் வளைவுகளில்
சிக்கிக் கொள்கிறது என் மோகம்...

கிறுக்குத்தனங்கள் செய்கிறாய்
காதல் கிறுக்கி
என்னை மிச்சமில்லாமல்
தின்று போகிறாய் காம ராட்சசி...

1 comment:

Admin said...

சிறப்பு நண்பா..

Post a Comment